வித்தியா பாலியல் படுகொலையும் சூத்திரதாரிகளின் சிறை நீடிப்பும்

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் பாலியல் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 9 முக்கிய சந்தேகநபர்களும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று (01) ஊர்காவல்துறை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது எதிர்வரும் 15ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையின் முடிவில் நீதவான் எஸ்.லெனின் குமார் முக்கிய நான்கு உத்தரவுகளை குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார்.

01.மாணவி வித்தியாவின்  பிரேத பரிசோதனை அறிக்கையை நீதிமன்றில் சமர்பிக்க வேண்டும்.

02.கொலை இடம்பெற்ற இடத்தில் காணப்பட்ட ஆதாரங்களை நீதிமன்றில் ஒப்படைக்க வேண்டும்.

03.சந்தேக நபர்களில் ஒருவர் சம்பவ தினத்தன்று கொழும்பு வெள்ளவத்தையில் இருந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளதால்; அவர் 13 அல்லது 14ம் திகதிகளில் வெள்ளவத்தை பகுதி தனியார் வங்கிகளில் பணம் மீளப் பெற்றுக் கொண்டது தொடர்பான சிசிரிவி காட்சிகளை நீதிமன்றில் முன்வைக்க வேண்டும்.

04.சட்ட வைத்திய அதிகாரியிடம் சந்தேகநபர்களை முன்னிலைப்படுத்தி இரத்த மாதிரிகளை பரிசோதனை செய்து அறிக்கை சமர்பித்தல் மற்றும் வேறு கொலை சாட்சியங்கள் இருப்பின் சமர்பித்தல்.

ஆகியவற்றினை சமர்பிக்க நீதவானினால் உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.