புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 9ஆவது சந்தேக நபரான சுவிஸ் குமார் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட பின்னர் வெள்ளவத்தைக்குச் தப்பிச் சென்றார்.
ஆகவே அவர் எவ்வாறு தப்பினார் என்பது தொடர்பான தெளிவானதும் சரியானதுமான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு, குற்றப்புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளருக்கு, ஊர்காவற்றுறை நீதவான் எம். எம்.றியால் உத்தரவிட்டுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று(09) ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது 9 சந்தேக நபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தாக குறிப்பிடப்படுகின்றது.
குற்றப்புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளருக்கு உத்தரவிட்ட நீதவான், எதிர்வரும்18ஆம் திகதி வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படும் எனவும் கூறியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.