பென்சில் கிறுக்கல்கள், ஒவிய வண்ணங்கள் என குழந்தைகள் பயன்படுத்தும் பல பொருட்களினால் சுவர்களில் கிறுக்கினால் அதனை சுத்தம் செய்வது ஒரு கடினமான செயல்தான்.. அதிலும் சமையலறைச் சுவர்களில், புகை, சமைக்கும்போது தெரிக்கும் உணவு அல்லது திரவக்கறைகள் என பலவகைகளில் சுவர்கள் மங்கிவிடும். அழுக்குப் படிந்த கை சுவற்றில் படுவதும் சுத்தம் செய்வதும் மிகவும் ஒரு கடினமான இருக்கும்.
இவற்றை எல்லாம் எப்படி இலகுவாக சுத்தம் செய்யலாம் என பார்ப்போம்.
வினிகரும் தண்ணீரும்:
வெதுவெதுப்பான தண்ணீரில் கால் கப் அளவிற்கு வினிகர் நன்கு கலந்து அதில் துணியை முக்கி சுவர்களைத் துடைக்கப் பயன்படுத்தலாம். வினிகரும் டிடெர்ஜென்டும் உங்களுக்குக் கடினமான கறைகளை போக்க வேண்டியிருப்பின் சிறிது டிடெர்ஜென்ட், வெள்ளை வினிகர் மற்றும் தண்ணீர் கலந்த கலவை நன்கு வேலை செய்யும்.
இந்த கலவை சிறிது நேரம் கறைமீது இருக்கும்படி வைத்துவிட்டு 10 நிமிடம் கழித்துத் துடைத்து சுத்தம் செய்யலாம். பின்னர் அந்த இடத்தை ஒரு சிறிது ஈரமான துணியால் துடைத்து விடுங்கள். இது சுவற்றில் உள்ள விடாப்பிடிக் கறைகளுக்கு போக்கும்.
வினிகர் மற்றும் சமையல் சோடா:
வினிகரும் சமையல் சோடாவும் ஒரு சிறந்த சுத்தப்படுத்திகள் என்பது நாமறிந்த்தே. இதை கலவையாக செய்யும்போது ஒரு சிறந்த சுத்தத்தை தந்து வேலையை எளிதாக்கும்.
இரண்டு கரண்டி வினிகரும் ஒரு கரண்டி சமையல் சோடாவும் சேர்த்து அதனோடு 3 கோப்பை [சிறிய அளவு] தண்ணீர் கலந்து சுத்தப் படுத்தப் பயன்படுத்தலாம். வளைவுகள் மற்றும் இடுக்குகள் மூலை முடுக்குகள், வளைவுகள் அல்லது வேலைப்பாடுகள் செய்யப்பட்ட சுவர்களில் சுத்தம் செய்ய ஸ்ப்ரே பாட்டில்கள் மிகவும் உதவும். அதனை ஸ்ப்ரே செய்த சிறிது நேரத்திற்கு பிறகு தெளிக்கப்பட்ட பகுதிகளில் துணியைக் கொண்டு துடைத்து சுத்தப்படுத்துங்கள்.
மரவேலை செய்த சுவர்கள்:
தண்ணீர் கலந்த வினிகரை இதற்குப் பயன்படுத்துங்கள். அதில் சிறிது எண்ணெய்சேர்ப்பதன் மூலம் மரப் பகுதிகள் மினுமினுப்பாக அழகாகத் தெரிய உதவும்.
ஆயில் பெயின்ட் [oil paint]:
ஆயில் பெயிண்ட் கொண்ட சுவர்களை சுத்தப்படுத்த வினிகர் மிகச் சிறந்த வழி.
பெயின்ட் செய்யப்பட்ட சுவர்களை வினிகர் கொண்டு எவ்வாறு சுத்தம் செய்வது என்ற குழப்பம் இருந்தால், மேலிருந்து கீழாக சுத்தம் செய்வதால் அழுக்குத் திட்டுகள் தோன்றாமல் இருக்கும்.