கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் உட்பட நான்கு பேர் எதிர்வரும் மாதம் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு நீதவான் எம்.கணேசராஜா குறித்த இந்த உத்தரவை பிறப்பித்தார்.
விபச்சார விடுதியொன்றை நடாத்திச் சென்ற குற்றச்சாட்டில் மட்டு . முன்னாள் மேயர் உட்பட 9 பேரை மட்டக்களப்பு காற்துறையினர் நேற்று(23) கைது செய்தனர்.
குறித்த சந்தேகநபர்களில், முன்னாள் மேயரின் கணவரும் அடங்குவதோடு , அவர் உள்ளிட்ட ஐந்து பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் உள்ளிட்ட நான்கு பேரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் மேலும் உத்தரவிட்டுள்ளார்.