விபச்சார விடுதியில் சீன பெண்கள் கைது

கொள்ளுபிடி – பாடசாலை வீதி பிரதேசத்தில் நடத்தி சென்ற விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன் தொடர்புடைய 3 சீன பெண் பிரஜைகளை கைது செய்துள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்தது.

அவர்கள்,இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.