விபத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை பொறுப்பேற்க 3 கணவர்கள் முன்வந்துள்ளதால் பொலிஸுக்கு பிரச்சினை

பாணந்­துறை பிர­தே­சத்தில் இ.போ.ச. பஸ்  ஒன்றில் பயணம் செய்த தாயும் மகளும் பாணந்­துறை வந்­து­ரா­முல்ல சந்­தியில் பஸ்ஸை விட்டு இறங்­கி­ய­போது பஸ்ஸின் பின் சில்லில் சிக்கி படு­கா­ய­முற்று அதே இடத்தில் தாய் உயி­ரி­ழந்­த­துடன் மகள் பாணந்­துறை ஆதார வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரு­கின்றார்.

கடந்த 2 ஆம் திகதி அதி­காலை இடம்­பெற்ற இவ்­வி­பத்தில்  30 வயதுப் பெண் உயி­ரி­ழந்­துள்ளார் என்று பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

இவ­ரது ஆறு வய­தான  மகள் பாணந்­துறை வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரு­கிறார்.

இதேவேளை உயி­ரிழந்த பெண்ணின் சட­லத்தை பெற்றுக் கொள்ள கணவன் எனக் கூறிக் கொண்ட மூவர் முன்­வந்­தி­ருப்­பது பிரச்­சி­னை­யாக இருப்­ப­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். பஸ் வண்டியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.