நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கச் சென்ற நிலையில் விபத்துக்குள்ளான, ஹெலிகொப்டரின் ஓட்டுனருடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உணவு உள்ளிட்ட உதவிப் பொருட்களை கொண்டு செல்ல அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கும் ஜனாதிபதி இதன் போது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
இன்று காலை, குறித்த ஹெலிகொப்டர் காலி – பத்தேகம பகுதியில் வைத்து விபத்துக்குள்ளானது.
எதுஎவ்வாறு இருப்பினும், அதில் பயணித்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என, விமானப்படை ஊடகப் பேச்சாளர் மேலும் உறுதிப்படுத்தியிருந்தார்.