விமலின் ஊதியம் அம்பலமானது..

விமல் வீரவன்ச வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக இருந்த போது, தனது அரசியல் பணிகளுக்காக அமைச்சின் மூலம் அவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அரச ஊதியத்தை வழங்கியமை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

2011 முதல் 2014 வரையானக் காலப்பகுதியில் பத்தரமுல்லை மற்றும் ஜனசெவன ஆகிய பகுதிகளில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் இரண்டு உப அலுவலகங்களில் பணியாற்றியதாக கூறி 20 பேருக்கு இவ்வாறு ஊதியம் வழங்கப்பட்டு வந்துள்ளது.

இவர்களில் மூவரை தவிர ஏனையவர்கள் வேறு இடங்களில் தொழில் புரிந்து சம்பளத்தை மட்டும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் கீழ் இயங்கி வந்த ஓசியன் வியூவ் நிறுவனத்தில் பெற்றுக் கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களில் அமைச்சின் ஊடக ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிய லங்காதீப பத்திகையின்ஊடகவியலாளரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரவன்சவின் அரச பணத்தில் உறவினர்கள்,நண்பர்களுக்கு ஊதியம் வழங்கியதன் காரணமாக நாட்டுக்கு ரூபா 30 மில்லியன் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.