விமலின் வழக்கு விசாரணையின் போது நீதிமன்றை அவமதித்த நபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்…

விமல் வீரவன்சவின் வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயற்பட்ட நபருக்கு எதிராக குற்றப்பத்திரிக்ரக தாக்கல் செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த குற்றப்பத்திரிக்கையினை கொழும்பு கொம்பனி வீதி பொலிஸாரை தாக்கல் செய்யுமாறு கோட்டை நீதவான் லங்கா ஜயரட்ன இன்று(07) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் வழக்கு விசாரணை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற போது குறித்த நபர் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயற்பட்ட காரணத்தால் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.