விமலுக்கு எதிரான முறைப்பாடு சீ.ஐ.டி இற்கு அல்ல பொலிஸ்மா அதிபருக்கு (UPDATE)

(FASTNEWS | COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தனக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என்றும், அது தொடர்பில் தான் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இணைந்து குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக முன்னாள் அமைச்சரும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தனது டுவிட்டர் தளத்தில் முன்னர் அறிவித்திருந்த பதிவு திருத்தப்பட்டு மீளவும் பதிவொன்றினை பதிவிட்டுள்ளார்.

அதில், ” குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தில் அல்ல பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு அளிக்கவுள்ளோம்..” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பதிவானது

+++++++++++++++++++++++++++++++++++++++ UPDATE 

விமலுக்கு எதிராக ரிஷாத் சீ.ஐ.டி முன்னிலையில் முறைப்பாடு

(FASTNEWS | COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தனக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என்றும், அது தொடர்பில் தான் குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக முன்னாள் அமைச்சரும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் தெரிவிக்கையில்,

“பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவினால் தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பல்வேறுபட்ட குற்றச்சாட்டுக்கள் என்னையும் எனது கட்சியினரையும் அனைத்து முஸ்லிம்களையும் அதிகளவு அசௌகரியங்களுக்கு உள்ளாக்கியுள்ளது. அதனால் இன்று காலை 11 மணிக்கு குறித்த பொய்யான மற்றும் தவறான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தில் நாம் முறைப்பாடு செய்யவுள்ளோம். குறுகிய அரசியல் இலாபங்களை கையாள்வது அவமானமாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.