விமல் வீரவங்சவின் பிணை மனு மீளவும் ஒத்திவைப்பு…

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தனக்கு பிணை வழங்குமாறு கோரி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் இன்று(24) விண்ணப்பித்துள்ளார்.

விமல் வீரவங்சவின் மகள் தற்போது திடீர் சுகயீனமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, தனது சட்டத்தரணியூடாக தாக்கல் செய்துள்ள மனுவில் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இதனை கருத்தில் கொண்டு தனக்கு பிணை வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

எவ்வாறாயினும், விடயங்களை ஆராய்ந்த நீதவான் இது குறித்த தீர்ப்பை ஏப்ரல் 3ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

இதேவேளை, தனக்கு பிணை வழங்கக் கோரி விமல் வீரவங்ச கடந்த புதன்கிழமை முதல் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)