அரச வாகனங்கள் 40 இனை முறைகேடாக பயன்படுத்தியமை குறித்து விமல் வீரவங்சவுக்கு எதிரான வழக்கு இன்று(06) மீளவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் அவரது விளக்கமறியல் எதிர்வரும் 20ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
———————————-UPDATE 01:00 PM
விமல் வீரவங்சவுக்கு வாதிக்க வழக்கறிஞர் முன்னிலையாகவில்லை…
அரச வாகனங்கள் 40 இனை முறைகேடாக பயன்படுத்தியமை குறித்து விமல் வீரவங்சவுக்கு எதிரான வழக்கு இன்று(06) மீளவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் அவர் சார்பில் வழக்கறிஞர் வருகை தரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
வீரவங்ச குற்றவாளிக் கூட்டில் நின்று, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தமக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை என்றும் இந்த வழக்கினால் தமக்கு ஏற்பட்டுள்ள அபகீர்த்தி குறித்து வாதிக்க சந்தர்ப்பம் வழங்குமாறும் விமல் வீரவங்ச கோட்டை நீதவான் லங்கா ஜயரத்னவிடம் வேண்டுகோள் விடுக்க, குறித்த கருத்துக்களை சுருக்கமாக கூறுமாறு நீதவான் பணித்துள்ளதாகவும் நீதிமன்ற தகவல் வட்டாரங்கள் தெரிவிகின்றன.