விமல் வீரவங்ச பிணை கோரி தாக்கல் செய்த மனு நிராகரிப்பு…

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்சவுக்கு பிணை வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவினை இன்று(21) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விகும் களுவாராய்ச்சி நிராகரித்துள்ளார்.

40 அரச வாகனங்களை மோசடியாக பயன்படுத்தி, நம்பிக்கை துரோகம் செய்து மோசடி புரிந்தமை, மோசடிக்கு உதவி ஒத்தாசை அளித்தமை ஆகிய குற்றச் சாட்டின் கீழ் விமல் வீரவன்சவுக்கு எதிராக 1982ஆம் ஆண்டின் 12 இலக்க பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் 5(1) அத்தியாயத்தின் பிரகாரமும் தண்டனை சட்டக் கோவையின் 386,388 ஆகிய அத்தியாயங்களின் கீழும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

அது தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச பிணை கோரி கொழும்பு மேல் நீதிமன்றில் தக்கல் செய்துள்ள மனுவினையே இவ்வாறு நீதிபதி நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(rizmira)