விமல் வீரவன்சவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…

(FASTNEWS | COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 29 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(27) உத்தரவிட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி முதல் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சட்டரீதியான வருமானத்தை தாண்டி 75 மில்லியன் ரூபாவுக்கும் அதிக வருமானங்களும் சொத்துக்களும் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவை வருமானங்கள் மற்றும் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தண்டனைக்குறிய குற்றம் எனவும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.