லஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரியான மென்டீஸ் என்ற நபரொருவர் தன்னை சந்திப்பதற்காக பாராளுமன்ற வளாகத்திற்குள் வருகைத் தந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச சபையில் குற்றஞ் சுமத்தியுள்ளார்.
பாராளுமன்ற இன்றைய அமர்வில் போது இடைநடுவில் குறுக்கிட்ட கருத்து தெரிவித்த போதே விமல் வீரவங்ச இதனைக் கூறியுள்ளார்.
லஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதமொன்றை தன்னிடம் கையளிப்பதற்காகவே அவர் பாராளுமன்ற வளாகத்திற்குள் வருகைத் தந்துள்ளதாகவும், அது தனது உரிமையை மீறும் செயற்பாடு எனவும் அவர் சபையின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
தனக்கு கடிதங்களை கையளிக்க வேண்டுமாக இருந்தால், தனது வீட்டிற்கு வருகைத் தந்து அதனை கையளிக்க வேண்டும் எனவும், அது தனது சிறப்புரிமை மீறும் செயற்பாடு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயம் குறித்த தாம் கவனம் செலுத்துவதாகவும், இவ்வாறான விடயங்கள் இடம்பெறுவதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் பிரதி சபாநாயகர் திலங்க சுமத்திபால சபை முதல்வரிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த விடயம் தொடர்பில் தான் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் அறிவித்ததாகவும், அது குறித்து சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பிரதி சபாநாயகர் , விமல் வீரவங்சவிற்கு அறிவித்தார்.
லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரியை பாராளுமன்ற வளாகத்திலிருந்து வெளியேற்றுவதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பிரதி சபாநாயகர் திலங்க சுமத்திபால குறிப்பிட்டுள்ளார்.