கொல்கத்தாவில் விமானம் ஒன்று தரையிங்குகையில் அந்த விமானத்தின் முன்புற டயர் வெடித்துள்ளது.
ஆனால், இதில் பயணம் செய்த 198 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளனர்.
பெங்களூரில் இருந்து கொல்கத்தா நகர் வழியாக மேற்கு வங்காளம் மாநிலம், சிலிகுரியில் உள்ள பக்டோக்ரா விமான நிலையத்தில் நேற்று பிற்பகல் 2.19 மணியளவில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் தரையிறங்கியது.
வழக்கம்போல் விமானத்தின் முன்புறம் மூக்குப்பகுதிக்கு கீழே இருக்கும் டயர் ஓடுபாதையின் தரையை தொட்டதும் திடீரென்று வெடித்து சிதறியது.
இதனால், ஓடுபாதையில் வேகமாக சென்ற அந்த விமானத்தின் ஓட்டத்தில் லேசான தடுமாற்றம் ஏற்பட்டது. விமானத்தின் முன்பகுதி லேசாக குலுங்கியதால் உள்ளே இருந்த பயணிகள் பீதி அடைந்தனர்.
இதை கவனித்த கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உடனடியாக தீயணைப்பு மற்றும் அவசர ஊர்தி வாகனங்களை அனுப்பி வைத்தனர்.
ஒருவழியாக வேகம் குறைந்து, விமானம் நின்றதும் அதில் இருந்த விமானிகள், பணியாளர்கள் மற்றும் பயணிகள் உள்ளிட்ட 198 பேரும் அவசர வாசல் வழியாக பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.