விமானநிலைய பாதுகாப்பு ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்…

விமான நிலையத்தின் பாதுகாப்பு பிரிவின் ஊழியர்கள் இன்று(22) பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு பிரிவின் பிரதானியின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக, விமான நிலைய, ஸ்ரீலங்கா சுதந்திர சேவையாளர் சங்கத்தின் தலைவர் எம்.டபிள்யு.பீ.முஹந்திரம் தெரிவித்துள்ளார்.