விமானப்படைக்கு சொந்தமான ஹெலி ஹிங்குராகொடயில் விபத்து

இலங்கை விமானப்படையின் ஹெலி விழுந்து நொறுங்கியது.

இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான ஹெலி ஒன்று, ஹிங்குராக்கொட பிரதேசத்தில் வைத்து, சற்று முன்னர் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

விமானப்படைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஹெலியொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது என்று கடற்படையின் பேச்சாளர் குரூப் கெப்டன் சந்திம அல்விஸ் தெரிவித்தார்.

குறித்த ஹெலியை தரையிறக்க முற்பட்ட போதே இந்த விபத்து சம்பவித்துள்ளதாகவும் அவர்  மேலும் குறிப்பிட்டார்.