இலங்கை விமானப்படையின் நடவடிக்கைப் பிரிவு முன்னாள் பணிப்பாளர் எயார்வைஸ் மார்சல் கே.வி.பி.ஜெயம்பதி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இலங்கை விமானப்படை இதற்கான கோரிக்கையை பாதுகாப்பு அமைச்சிடம் விடுத்துள்ளது.
ஜெயம்பதி, விமானப்படையின் பணிகளில் முறைகேடுகளை மேற்கொண்டதாகவும் ஒழுங்குகளை மீறியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தாம் பதவியில் இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக ஜெயம்பதி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டை செய்துள்ளார்.
இது விமானப்படையின் ஒழுங்குகளை மீறும் செயல் என விமானப்படை, பாதுகாப்பு அமைச்சிடம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.