(FASTNEWS|COLOMBO) ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் சுகோய் சூப்பர்ஜெட் 100 விமானம் அவசரமாக தரையிறங்கும் போது ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி விமானத்தில் பயணம் செய்த 41 பயணிகள் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த விமானத்தில் 78 பயணிகள் மற்றும் 5 விமான பணியாளர்கள் பயணித்துள்ளனர் மாஸ்கோவின் ஷெர்மெட்யெவோ விமான நிலையத்தில் இருந்து விமானம் சென்ற சிறிது நேரத்தில் விமானத்தில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டு விமான கட்டுப்பாட்டு அறையின் உதவியோடு விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
தரையிறங்கி விமானம் ஓடு பாதையில் சென்று கொண்டிருக்கும் போதே திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியதையடுத்து விமானத்தின் அவசர வழி மூலமாக பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
எனினும் தீ வேகமாக பரவத் தொடங்கியதால், விமானத்தில் பயணம் செய்தவர்களில் 2 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது..
இந்த விபத்து குறித்து விசாரணை செய்து வருவதாக ரஷ்ய விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.