விமான சேவைகள் கட்டுப்பாட்டு பிரிவைச் சேர்ந்த பணியாளர்கள் தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.
கட்டுப்பாட்டு சபையின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வேதன அதிகரிப்பைக் கோரியும், சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை நேற்று முன்தினம் ஆரம்பித்தனர்.
பின்னர் போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இணங்கிய நிலையில் இந்த போராட்டம் நேற்று கைவிடப்பட்டிருந்தது.
எனினும் பேச்சுவார்த்தையின் போது தங்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காத நிலையில், மீண்டும் நேற்று மாலை முதல் சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.