2017ஆம் வருடத்துக்கான சர்வதேச Skytrax விமான சேவைகள் வகைப்படுத்தலுக்கமைய, ஸ்ரீ லங்கன் விமான சேவை 81ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
வருடாந்தம் மேற்கொள்ளப்படும் குறித்த தரப்படுத்தலில், கட்டார் எயார்வேஸ் சேவை முதலாவது இடத்தையும் சிங்கப்பூர் விமான சேவை இரண்டாவது இடத்தையும் ஜப்பான் ஓல் நிபொன் விமான சேவை மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.
குறித்தத் தரப்படுத்தலில், கடந்த வருடம், இலங்கை 67ஆவது இடத்திலும் 2015ஆம் ஆண்டு 73ஆவது இடத்திலும் 2013ஆம் ஆண்டு 68ஆவது இடத்திலும் தரப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.