விமான நிலைய சத்தத்தால் கடும் அவதிப்படும் ராணி எலிசபெத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி நஷ்ட ஈடு வழங்கப்படுகிறது.
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் மாளிகை ஒன்று விண்ட்கேள் என்ற இடத்தில் உள்ளது. 900 ஆண்டு பழமை வாய்ந்த இந்த அரண்மனை வளாகத்தில் மன்னர்கள் 8–வது ஹென்றி, முதலாம் சார்லஸ் ஆகியோர் புதைக்கப்பட்டு கல்லறைகள் கட்டப்பட்டுள்ளன.
இங்கு ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். வார இறுதி நாட்களில் ராணி எலிசபெத்தும் வந்து தங்கி செல்கிறார்.
இதன் அருகே தான் ‘ஹீத்ரூ சர்வதேச விமான நிலையமும்’ உள்ளது. இங்கு 3–வது ஓடு தளம் அமைக்கப்பட உள்ளது. அதில் பெரிய ரக விமானங்கள் வந்து இறங்கி ஏறிச் செல்கிறது.
இதனால் இப்பகுதியில் உள்ளவர்களும் கடும் சத்தத்தால் தொல்லைகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே, அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அதன்படி ராணி எலிசபெத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி நஷ்ட ஈடு வழங்குகிறது.
(riz)