விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆண்கள் காலிறுதி போட்டி ஒன்றில் பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் வாவ்ரிங்கா 21-ம் நிலை வீரரான காஸ்குயட்டை சந்தித்தார். இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 4-ம் நிலை வீரரான வாவ்ரிங்கா 4-6, 6-4, 6-3, 4-6, 9-11 (2-3) என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
முதல் செட்டை இழந்த வாவ்ரிங்கா அதன்பின் சுதாரித்துக்கொண்டு அடுத்த இரண்டு செட்டுகளை தொடர்ச்சியாக வென்றார். ஆனால், 4-வது செட்டை இழந்தார். இதனால் வெற்றியை நிர்ணயிக்கும் ஐந்தாவது செட்டில் வாவ்ரிங்காவுக்கு காஸ்குயட் கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால் அந்த செட் டை பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் காஸ்குயட் 11-9 என கைப்பற்றி அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதியில நம்பர் ஒன் வீரர் ஜோகோவிக் சிலிச்சை 6-4, 6-4, 6-4 என்ற நேர்செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் ஜோகோவிக் காஸ்குயட்டை எதிர்கொள்கிறார்.
(riz)