வியட்நாமில் வெள்ளத்தில் சிக்கி 37 பேர் உயிரிழப்பு…

வியட்நாமில் கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 37 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் கடந்த சில நாட்களாக கடுமையாக மழை பெய்து வருவதுடன் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், நோயன் மாகாணத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 8 பேரும், யென்பாய் உள்ளிட்ட பிற மாகாணங்களில் 7 பேரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 40 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களை மீட்புக் குழுவினர் தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.