வியட்நாமில் பெய்து வரும் கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.
ஹோவாபின் பகுதியில் அடுத்தடுத்து குடியிருப்பில் உள்ள 19 பேர் நேற்று(13) அதிகாலை மண்சரிவில் சிக்கி புதைந்துள்ளனர். இதில் 9 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாகவும் மற்றவர்களின் உடல்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 34,000 வீடுகள் சேதமாகியுள்ளதுடன் சுமார் 22,000 ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.