வியட்நாம் அதிபர் இந்தியா விஜயம்…

வியட்நாம் அதிபர் திரன் தாய் குவாங் தனது மனைவியுடன் மூன்று நாள் அரசு முறைப்பயணமாக இந்தியாவுக்கு விய்ஜயம் மேற்கொண்டுள்ளார்

இன்று காலை டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற வியட்நாம் அதிபர், ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி வரவேற்றனர். அவருக்கு முப்படை அணிவகுப்புடன் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக இந் திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2016-ம் ஆண்டு பிரதமர் மோடி வியட்நாமிற்கு விஜயம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. இதன்போது இரு நாடுகளுக்கிடையே 12 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சதிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவுடன் பாதுகாப்பு துறையில் ஒத்துழைத்து செயல்படுவதற்காக வியட்நாம் நாட்டுக்கு ரூ.3,250 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.