வியானா நீரோடையில் கார் விழுந்து விபத்து – ஒருவரை காணவில்லை..

பதுளை, மஹியங்கன வீதியில் பயணம் செய்து கொண்டிருந்த மோட்டர் வாகனம் ஒன்று இன்று(26) காலை 6.20 மணியளவில் மாபாகட வெவ, 17 ஆம் கட்டைக்கு அருகில் வியானா நீரோடையில் விழுந்து விபத்துக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.

காரில் பயணம் செய்த நால்வரில் மூவர் காப்பாற்றப்பட்டிருப்பதுன் ஒருவரை காணவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

ஆசிரியை ஒருவர், ஆசிரியர்கள் இருவர் மற்றும் வங்கி அதிகாரியொருவர் இம்மோட்டர் வாகனத்தில் பதுளையில் இருந்து மஹியங்கன நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த போதே குறித்த இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

மஹியங்கன பொலிஸ் அதிகாரிகள் காணமல் போனவரை தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர மேலும் தெரிவித்திருந்தார்.

 

#rishma