(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரசாங்கத்தின் பொறுப்பு, முயற்சிகள் பற்றிய குழுவின் விசேட கூட்டம் இம்மாதம் 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடத்துவதற்கு அக்குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தீர்மானித்துள்ளார்.
கோப் குழுவின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்கள், அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இந்த விசேட கூட்டத்தின்போது மதிப்பாய்வு செய்யப்பட உள்ளது.
இதேவேளை, எதிர்காலத்தில் கோப் குழுவுக்கு அழைக்கப்பட வேண்டிய நிறுவனங்கள் தொடர்பில் இக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படுமென சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு கோப் குழுவின் கூட்டங்களை ஒன்லைன் ஊடாக முன்னெடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.