(FASTGOSSIP | COLOMBO) – எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 03ம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையே இடம்பெறவுள்ள போட்டியின் இந்திய அணியின் தலைமைப் பொறுப்பினை ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோஹித் ஷர்மாவுக்கு வழங்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியக் குழு அவதானம் செலுத்தியுள்ளது.
அதன்படி, நிலையான தலைவர் விராட் கோஹ்லிக்கு குறித்த சுற்றுலாவில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய முன்னிலை ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இருபதுக்கு -20 மற்றும் ஒருநாள் போட்டிகளின் பின்னர் இடம்பெறவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் போட்டியிலும், நிலையான தலைவர் விராட் கோஹ்லியை நீக்கி அஜிங்கியா ரஹானாவை நியமிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.