விருது பெற்ற நிதி அமைச்சருக்கு இடமாற்றமா?

இன்று இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது,நிதி அமைசச்ர் ரவி கருணாநாயக்கவின் பதவி,வெளிவிவகார அமைச்சராக இடமாற்றப்பட்டது.

இந்த நிலையில்,சிறந்த நிதி அமைச்சர் என்ற விருதை பெற்ற அண்மையில் ரவி கருணாநாயக்கவின் பதவியை மாற்றியமைக்கான காரணம் என்னவென்று கூட்டு எதிர்க்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்தே,கூட்டு எதிர்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் டளஸ் அழகப் பெரும மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆசிய பசுபிக் வளையத்தின் சிறந்த நிதி அமைச்சர் விருதினை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சில மாதங்களுக்கு முன்னர் பெற்றுக் கொண்டார்.ஏன் இவ்வாறு அவரின் பதவி மாற்றியமைக்கப்பட்டது என கூட்டு எதிர்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கேள்வி எழுப்பியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,பிரித்தானியாவின் த பேங்கர் சஞ்சிகை ஆசிய பசுபிக் வளையத்தின் 2017ஆம் ஆண்டிற்கான சிறந்த நிதி அமைச்சராக ரவி கருணாநாயக்க தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது