விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனை 40 வீத வீழ்ச்சியில்..

அதிஷ்ட லாபச் சீட்டின் விலையை 30 ரூபாவாக அதிகரிக்கப்பட்டதனைத் தொடர்ந்து அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனை 40 வீத வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து இலங்கை அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

அதிஷ்ட லாபச் சீட்டை 30 ரூபா கொடுத்து கொள்வனவு செய்ய வாடிக்கையாளர்கள் பின்னிப்பதாக, அந்த சங்கத்தின் பொருளாளர் அலக்ஸ் பர்ணாந்து மேலும் தெரிவித்தார்.

இந்த விலை அதிகரிப்பு காரணமாக தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்

இந்நிலையில், இந்த பிரச்சினை தொடர்பில் எதிர்வரும் வாரம் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படும் என அனைத்து இலங்கை அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையாளர்கள் சங்கத்தின் பொருளாளர் அலக்ஸ் பர்ணாண்டோ குறிப்பிட்டார்.