வில்பத்து அண்மித்த பகுதிகளில் மரங்களை வெட்டியது அரசாங்கமே…. [VIDEO]

வில்பத்து அண்மித்த பகுதிகளில் மீளவும் மீள்குடியேற்ற மரங்களை வெட்டியது அரசாங்கமே என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

லண்டன் நகரில் சிங்கள பீபீசி அலைவரிசையின் நேரடி ஒளிபரப்பின் போதே அவர் மேற்குறித்த கருத்தினை தெரிவித்துள்ளார்.

“மரங்களை வெட்டி சுத்தம் செய்தது மக்கள் அல்ல. அரசு தான் சுத்தம் செய்தது. அரசு என்ற ரீதியில் அல்லது பிரதேச செயலகங்களால் சுத்தம் செய்யப்பட்டது. இல்லையேல் டிம்பர் கோப்பரேசன் இனால் அல்லது வன துறையினால் சுத்தம் செய்யப்பட்டிருக்கலாம், அவர்கள் தான் காணிகளை சுத்தம் செய்து மீள்குடியேற்றினார்கள்..” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களிடையே இன ரீதியான பிளவுகளை ஏற்படுத்த தெற்கில் சிறு கூட்டங்கள் ஒன்று சேர்ந்து தமக்கு சேறு பூசுவதாகவும் அமைச்சர் இதன்போது கூறியுள்ளார்.

குறித்த காணொளி…

(rizmira)