வில்பத்து தொடர்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவரும், வணிக மற்றும் வர்த்தகத்துறை அமைச்சரினால் நேற்று(5) கொழும்பில் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கருத்துத் தெரிவிக்கையில்;
வில்பத்து காடழிப்பு தொடர்பில் ஆரம்ப கட்டமாய் கருத்துத் தெரிவிக்கையில்;
இதன் பின்னணியில் முற்று முழுதுமாக இனவாதம் தலைதூக்கியுள்ளதனை மட்டும் எனக்கு இவ்விடத்தில் தெளிவாகக் கூற முடியும் ஏனெனில் இன்றைய தேர்தல் சூழ்நிலையில் எனேக்கெதிராக செய்யும் மிகப் பெரும் சூழ்ச்சியே இந்த வில்பத்து தொடர்பான முறுகல் நிலை. தனக்கு வில்பத்து குறித்து எதிர்வரும் செப்டம்பர் 16 ம் திகதியன்று நீதிமன்ற அழைப்பாணை கிடைக்கப்பெற்றுள்ளது.
மேலும், வில்பத்து தொடர்பில் கூறுவதாயின், வடமாகாணத்தில் இருந்து 1990ம் ஆண்டு விடுதலை புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட சமுதாயத்தினை அவர்களது சொந்த மண்ணில் மீள்குடியேற்றியது எந்த விதத்தில் தவறானது என அவர் மேலும் கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும், இனவாதத்தினை தலை தூக்குவதற்க்கு ஆரம்ப கர்த்தாவாக இருந்தவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே, தம்புள்ளை பள்ளி தொடக்கம் அளுத்கமை கலவரம் வரை எந்தவொரு நடவடிக்கையினையும் எடுக்காது வேடிக்கை பார்த்தனர்.
மேலும், என்னை அரசியலிலிருந்து நீக்கவும் சதிகள் இடம்பெருகின்றமையும் நான் அறிந்ததே. விரைவில் அதனை அம்பலப்படுத்துவேன். தேர்தல் நெருங்கும் சந்தர்ப்பம் பார்த்து எதிர்காலத்தில் என்னை முழுமையாக அரசியல் நடவடிக்கையிலிருந்து ஓரம் கட்டுவதற்கும், எனது சமுகத்தை பாதாளத்திற்குள் தள்ளிவிடுவதற்கும் மேற்கொள்ளப்பட்டிருந்த சதித்திட்டம் அம்பலாமாகியுள்ளதாகவும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும்,எமக்கு விடுக்கப்பட்ட இந்த அழைப்பாணையை, எமது உரிமையை நீதிக்கு முன்னால் கொண்டு செல்வதற்கு எமக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு உன்னதமான சிறந்த சந்தர்ப்பம் இது என்றே நாம் கருதுகிறோம்.
எனவும் கூறியிருந்தார்.
ஊடகவியலாளர் சந்திப்பின் முழு வடிவம் …..
[youtube url=”https://www.youtube.com/watch?v=k06ZVrj3i2U” width=”560″ height=”315″]
(riz)