வில்பத்து குறித்த ஜனாதிபதியின் தீர்மானம் மீள்குடியேற்றத்திற்கு தடையாகாது – அமைச்சர் ரிஷாத்..

வில்பத்து வனவிலங்குகள் சரணாலயம் தொடர்பில் ஜனாதிபதி அண்மையில் மேற்கொண்ட தீர்மானமானது போரில் பாதிக்கப்பட்ட மக்களை அங்கு குடியேற்றுவதில் எந்த தடையையும் ஏற்படுத்தாது என அமைச்சர் றிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

வில்பத்து வன விலங்குகள் சரணாலயத்தை விரிவுபடுத்தி சரணாலயத்தை மீண்டும் வர்த்தமானியில் வெளியிடுமாறு ஜனாதிபதி அண்மையில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

வில்பத்து வனப்பகுதியில் எவரையும் குடியமர்த்தவோ எதிர்காலத்தில் குடியேற்றவோ எண்ணவில்லை என அமைச்சர் பதியூதீன் கூறியுள்ளார்.

வில்பத்து சரணாலயம் தொடர்பில் தம்மீது குற்றம் சுமத்தினாலும் அரசாங்கத்தை விட்டு செல்ல போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.