வில்பத்து வனப்பிரதேசத்தில் அழிவுகள் மேற்கொள்ளப்படவில்லை – ஜயதிலக

வில்பத்து சரணாலயத்தில் மீளவும் மக்களை குடியேற்றுவதில் எவ்வித முறைகேடுகளும் இடம்பெறவில்லை எனவும் வில்பத்து வனப்பிரதேசத்தில் அழிவுகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவித்து வட மாகாண சபையில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

வட மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் வீ.ஜயதிலக அவர்களாலே குறித்த முன்மொழிவு முன்வைக்கப்படதோடு; மாகாண சபையின் கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு அளித்ததோடு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் ஏ.ஐய்யூப் அவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

‘‘வில்பத்து இனை கைப்பற்றி விட்டார்கள் என பேருவளை பகுதியில் இனவாதத்தினை சீண்டியது போலவே வடக்கிலும் சீண்ட முற்படுகின்றனர். சில ஊடகங்களும் சில நபர்களும் பொய்யான பிரச்சாரங்களை இனவாத சிந்தனையுடன் பரப்புகின்றனர். வில்பத்துவில் குடியேறியதாக குறிப்பிடப்படும் மக்கள் 22 வருடங்களுக்கு பின்னர் தங்களது சொந்த மண்ணுக்கு திரும்பியுள்ளனர். அவ்வாறு திரும்புகையில் மரங்கள் வளர்ந்து காடாக காட்சியளிக்கின்றமை இயற்கையின் இயல்பே.. இந்நாட்டில் சிங்கள அல்லது தமிழ் அல்லது முஸ்லிம் நபரொருவருக்கு அகதியாக சென்ற பின்னர் மீளவும் தமது சொந்த மண்ணில் குடியிருக்க முழுமையான சுதந்திரமும் உரிமையும் உண்டு. அதனை புறக்கணிக்கவோ எதிர்க்கவோ யாருக்கும் உரிமை இல்லை…” என ஜயதிலக தெரிவித்துள்ளார்.