வில்லியாகும் நமீதா

(FASTGOSSIP|COLOMBO ) – பல்வேறு வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார், அடுத்ததாக இயக்கும் படத்தில் என்.டி.ஆர். பாலகிருஷ்ணா நடிக்க உள்ளார். தெலுங்கில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இந்த படத்தில் சோனல் சவுகான் என்ற நடிகை என்.டி.ஆர். பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் இரண்டாவது நாயகியாக நடிகை வேதிகா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்றும் தகவல் வெளியாகின.

இந்நிலையில் இந்த படத்தில் பிரபல கவர்ச்சி நடிகை நமீதாவும் தற்போது இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. நமீதா இந்த படத்தில் வில்லியாக நடிக்க உள்ளதாகவும், அவரது கேரக்டர் இந்த படத்தின் கதையை திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

நமீதா ஏற்கனவே ‘சிம்ஹா’ என்ற படத்தில் என்டிஆர் பாலகிருஷ்ணாவுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.