விளக்கமறியலிலுள்ள DIG அனுரவிற்கு மருத்துவ பரிசோதனை

றகர் வீரர் வஸீம்  தாஜூடின் கொலை தொடர்பிலான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவிற்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

கொழும்பு ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் நேற்று விசேட மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

சிறைச்சாலை அதிகாரிகளின் கடுமையான பாதுகாப்பிற்கு மத்தியில் நேற்று காலை அனுர சேனாநாயக்க வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் பாதுகாப்பாக மீளவும் கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலைக்கு அழைத்துச்  செல்லப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துசார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவிற்கு அமைய குறித்த இந்த பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

அனுர சேனாநாயக்கவிற்கு காணப்படும் நோய்கள் தொடர்பிலேயே இந்த பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

அனுர சேனாநாயக்க கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலையின் விசேட சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.