அத்துடன், விளம்பரத்தின் மூலம் தொடர்பு கொண்ட நபர், தன்னை ஏமாற்றி விட்டார் என்று குறித்த மாணவன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன், ஒரு விளம்பர சேவை ஊடாக அப்பிள் ஐ போன் 6 எஸ் ரகத்தை சேர்ந்த அலைபேசியை பார்வையிட்டு அவ்விளம்பரத்தை பிரசுரித்துள்ள நபரான இரத்தினபுரி, பெல்மதுல்ல பகுதியை சேர்ந்த பி.ஜே சமிந்தவைத் தொடர்பு கொண்டு தொலைபேசி வாங்குவது தொடர்பாக வினவியுள்ளார்.
இதன்போது அம்மாணவனிடம் குறித்த தொலைபேசி கொள்வனவு செய்வதற்கான எல்லா ஒழுங்கு முறையையும் கூறி சகல பணத்தையும் முழுமையாக செலுத்தினால் தொலைபேசியுடன் சில அன்பளிப்புகள் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த விளம்பரத்தை நம்பிய மாணவன் ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாவை குறித்த நபரின் வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டதுடன், அது தொடர்பாக அவருக்கு அறிவித்துள்ளார்.
அதன்பின்னர் விளம்பரம் பிரசுரித்தவர் குறித்த மாணவனுடன் இன்று வரை தொடர்பு கொள்ளாது விட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாணவன் தற்போது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார்.