UPDATE- தயாசிறி ஜெயசேகரவுக்கு துணை அமைச்சரவைப் பேச்சாளர் பதவி..

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இணை – அமைச்சரவைப் பேச்சாளராக அமைச்சர் தயாசிரி ஜெயசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் இன்று(30) வழங்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.

இதற்கமைய, அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன மற்றும் கயந்த கருணாதிலக்க ஆகியோருக்கு மேலதிகமாக, தயாசிறி ஜயசேகரவும் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

 

————— UPDATE 04:40

விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகரவின் பதவியில் மாற்றம்..

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அமைச்சரவை இணைப் பேச்சாளராக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர நியமிக்கப்படவுள்ளார் என அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவை இணைப்பேச்சாளராக தயாசிறி ஜெயசேகரவை நியமிப்பதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் இணங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், குறித்த கட்சியின் தலைவரான அதிபர் மைத்திரிபால சிறிசேனவே இதுபற்றிய அதிகாரபூர்வ முடிவை எடுப்பார் என்று தெரியவருகிறது.

தற்போதைய அரசின் அமைச்சரவை இணைப் பேச்சாளர்களாக ராஜித சேனாரத்ன மற்றும் கயந்த கருணாதிலக ஆகியோர் இருக்கின்றனர்.

சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்புத் துறையில் உயர் பதவி வழங்கவுள்ளதாக ஜனாதிபதி அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவித்திருந்தார் என்று அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன வெளியிட்ட தகவலை அடுத்து, அவருக்கு எதிராக சுதந்திரக் கட்சியினர் போர்க்கொடி தூக்கியிருந்தனர்.

இந்நிலையில் சுதந்திரக் கட்சி சார்பிலும் ஒருவரை அமைச்சரவை இணைப் பேச்சாளராக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)