விஷ்ணுவின் அவதார சர்ச்சையில் சிக்கிய தோனியின் வழக்கு பிற்போடு

இந்திய கிரிக்கெட் அணியின் கெப்டன் மகேந்திர சிங் தோனி. ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆட்டத்துக்கு அவர் தற்போது கேப்டனாக பணியாற்றி வருகிறார். பல்வேறு விளம்பரங்களில் நடித்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகிறார்.

இதற்கிடையே தோனியை விஷ்ணுவின் அவதாரமாக சித்தரித்து அவரது கையில் ஷூ உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வைத்திருப்பது போன்ற அட்டைப்படம் ஒன்று கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு பத்திரிகையில் வெளியாகி இருந்தது.

இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்துவதாக கூறி அவருக்கு எதிராக பல்வேறு நகரங்களில் வழக்கு தொடரப்பட்டது.

பெங்களூர் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் தடை விதித்து உத்தரவிட்டது.

ஆந்திர மாநிலம் அனந்தபூரை சேர்ந்த விஷ்வ இந்து பிரிவுத்தலைவர் ஷியாம் சுந்தர் தோனிக்கு எதிராக அனந்தபூர் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக தோனி ஆஜராகாததால் சம்மன் அனுப்பட்டுள்ளது. நவம்பர் 7ம் திகதி அவர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ஒஜ்ஜப்பா உத்தவிட்டார்.

 

(riz)