அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் “விஸ்வாசம்” படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று(23) அதிகாலை 3.40 மணிக்கு வெளியாகவுள்ளது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மிகச் சரியாக திட்டமிட்ட நேரத்தில் சமூக வலைத்தளங்களில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது.
அஜித் இப்படத்தில் இரு வேடங்களில் நடித்துள்ளார் என்ற கூறப்பட்ட நிலையில், இந்த ஃபர்ஸ்ட்லுக்கும், “ரெட்டைத்தல” என்பதை உறுதி செய்துள்ளது. மேலும் தந்தை மகன் என இரண்டு அட்டகாசமான லுக், அஜித் ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்துள்ளது.
அத்துடன், இந்த ஃபர்ஸ்ட்லுக்கில் பொங்கல் வெளியீடு என்பதையும் படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர். எனவே, வரும் பொங்கல் தினத்தில் அஜித் ரசிகர்களுக்கு ஒரு அட்டகாசமான விருந்து காத்திருக்கின்றது.