(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த ஏப்ரல் 21ம் திகதியன்று கட்டுவாப்பிடிய தேவாலயத்திற்கு மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டுத் தாக்குதல் காரணமாக பல்வேறு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்து வாழ்வோரும் குறித்த கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
அவ்வாறு முகங் கொடுக்க நேர்ந்துள்ள கட்டுவாப்பிடிய பகுதியில் வசிக்கும் 19 வயதுடைய பெற்றோர்களை இழந்த இளைஞன் ஷஹேன் கெவின் இனது கதையே இது.
“ஒருநாள் திடீரென த்ரீவீல் தானாக ஸ்டார்ட் ஆகியது. இன்னொரு நாள் அந்த த்ரீவீல் இனது லைட் தானாக எரிந்தது” என ஷஹேன் அவனது கதையினை ஆரம்பித்தான்.
ஷஹேன் கெவின் கட்டுவாப்பிட்டிய, நுகவெல வீதியில் அம்மா, அப்பா மற்றும் பாட்டி உடன் வசித்து வந்தான். அவனை மட்டும் தனி மரமாய் வைத்து விட்டு குடும்பத்தில் இருந்த மூவரும் குண்டுத் தாக்குதலில் பலியாகியிருந்தனர். ஷஹேன் கெவின் இவ்வுலகில் தனியாக இருக்க அவனது பெற்றோர்களது வீட்டின் உரிமை கூட அவனுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. 19 வயதான அவனுக்கு அவ்வளவு சீக்கிரமாக வீட்டின் உரிமைப் பத்திரம் வழங்க பெற்றோர்கள் நினைத்திருக்கவும் இல்லை. ஆனால் இப்போது அவனுக்கு வீடு சட்டப்பூர்வமாக கிடைத்துள்ளது. எனினும் குறித்த சம்பவத்தின் பின்னர் அவனது பாட்டனினால் குறித்த வீட்டுப் பத்திரம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்னமும் கல்வி கற்பதால் அவனது பாட்டன் வீட்டுப் பத்திரத்தினை வைத்திருப்பதாக நினைத்தாலும், அவனது கனவு வெளிநாடு செல்வதாகும். ஆனால் அதற்கு முன்னர் தனக்கு உரித்தான வீட்டினை வாடகைக்கு வழங்க முடியாமல் தவிக்கிறான்.
தொடர்ந்தும் அவன் கதையினை கூறுகையில்;
“ அம்மா அப்பா பாட்டி இறந்ததற்கு பின்னர் எனக்கு வீட்டில் தனியாக இருக்க முடியாததால் வீட்டினை வாடகைக்கு வழங்கி விட்டு நான் உறவினர் வீட்டிற்கு சென்றேன். அவர்கள் இரண்டு மூன்று நாட்கள் இருந்து விட்டு இந்த வீட்டில் பேய் இருப்பதாக கூறி வீட்டில் இருந்து சென்று விட்டனர். எனக்கு மட்டும் தான் இந்த வீட்டில் இருக்க முடியும்.
த்ரீவீல் அப்பாவுடையது. அந்தச் சந்தர்ப்பத்தில் த்ரீவீல் வீட்டிற்கு முன்னர் இருந்தது. மாலை 6 மணிக்கு பின்னர் என்னால் த்ரீவீல் இனை அசைக்க முடியாது. ஒவ்வொரு விதமாக சத்தம் ஏற்படுகிறது”
ஒருநாள் திடீரென த்ரீவீல் தானாக ஸ்டார்ட் ஆகியது. இன்னொரு நாள் அந்த த்ரீவீல் இனது லைட் தானாக எரிந்தது. நான் வெளிநாடு செல்ல எண்ணியுள்ளேன். வீட்டினை மூடி விட்டு தான் வெளிநாடு செல்ல வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் தேவாலய போதகர்களுக்கு தெரிவித்தேன். அவர்கள் வந்து வழிபாடுகளில் ஈடுபட்டுச் சென்றிருந்தனர். எனினும் எதுவும் கைகூடவில்லை என ஷஹேன் தெரிவித்திருந்தார்.
நீர்கொழும்பு – நிமந்தி பெர்னாண்டோ