வீதிகளில் ஒளிரும் விளக்குகளின் நேரத்தை குறைக்குமாறு அறிவுறுத்தல்…

வீதிகளில் ஒளிரும் விளக்குகளின் நேரத்தை  2 மணித்தியாலங்களினால் குறைக்குமாறு மின் வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவித்துள்ளது.

அதன்படி வீதி விளக்குகள் ஒளிரவிடும் காலம் 1 மணித்தியாலம் பிற்போடப்பட்டு, ஒரு மணித்தியாலத்துக்கு முன்னர் வீதி விளக்குகளை அணைக்க நடவடிக்கை எடுக்குமாறு உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும், ஆணையாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலவி வரும் கடும் வறட்சி நிலைமை காரணமாக இந்நடவடிக்கை மேற்கொள்வதாக அமைச்சு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.