வீதியில் பயணித்த ஆட்டோ மீது மரம் வீழ்ந்ததில் நேர்ந்த அனர்த்தம்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

இராகலை -புரூக்சைட் பகுதியில் இன்று (8) காலை வீதியில் பயணித்து கொண்டிருந்த ஓட்டோ மீது மரம் வீழ்ந்ததில் ஆட்டோவில் பயணைத்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹய்பொரஸ்ட் பகுதியிலிருந்து இருந்து இராகலையை நோக்கி பயணித்து கொண்டிருந்த ஓட்டோ மீதே பாரிய மரம் வீழ்ந்துள்ளது.

இதன்போது வாகனத்தில் ஓட்டோ சாரதி உள்ளிட்ட நால்வர் பயணித்துள்ளடன், 61 வயதான பி.எஸ்.மயில்வாகனம் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் ஏனைய மூவரும் காயங்களுடன், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.