வீதி இல.187 கட்டுநாயக்க விமான நிலைய – கொழும்பு கோட்டை தனியார் பேரூந்துகள் இன்று(11) பணிப்புறக்கணிப்பினை முன்னெடுத்துள்ளன.
மேல் மாகாண சாலை பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் வீதி இல.187 குளிரூட்டப்பட்ட தனியார் பேரூந்துகள் கட்டுநாயக்க – கொழும்பு தெற்கு அதிவேக வீதியில் மற்றும் சாதாரண சேவையிலும் பயணிக்க அனுமதி வழங்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.