வீதி சிறுவர்களுக்கு பணம் அல்லது உணவு வழங்க தடை

(FASTNEWS|COLOMBO) உகண்டாவில் வீதி சிறுவர்களுக்கு பணம் அல்லது உணவு வழங்க தடை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கான புதிய சட்டமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிறுவர்களை வர்த்தக ரீதியாகவோ அல்லது பாலியல் ரீதியாகவோ பயன்படுத்துவதை தடுப்பதே இதன் நோக்கமாகும்.

உகண்டா தலைநகர் கம்பாலாவில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் வீதிகளில் வாழ்வதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிலர் \பணம் அல்லது உணவை வழங்கி சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது. இதனால் வீதி சிறுவர்களுக்கு பணம் அல்லது உணவு வழங்குவது தண்டனைக்குரிய குற்றமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த குற்றத்தை இழைப்போர் 6 மாத சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டிவருமென உகண்டா அரசாங்கம் தெரிவித்துள்ளது