கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சில் ஆடை விநியோகித்தமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டிருக்கின்ற வழக்கின் இறுதித் தீர்மானம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(24) தெரிவித்துள்ளது.
இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையகத்திற்கு சொந்தமான 600 மில்லியன் ரூபா பணத்தினை பயன்படுத்தி சில் ஆடை விநியோகித்தமை தொடர்பில் அரச பணத்தை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தியே குறித்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க,இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையகத்தின் முன்னாள் பணிப்பாளர் அனுர பல்பிட்ட ஆகியோரே குறித்த வழக்கில் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
குறித்த பிரதிவாதிகளுக்கெதிரான விசாரணை முடிவடைந்ததுடன் அவர்களிடமிருந்து வாய்,எழுத்து மூலமான வாக்குமூலங்கள் பெறப்பட்டு நிறைவடைந்ததை தொடர்ந்து வழக்கின் முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(rizmira)