வீரர்களுக்கு பிஸ்கட் உண்ணத் தடை.. – இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் அசங்க உத்தரவு..

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ஓய்வு அறையில் பிஸ்கட் வகையான உணவு பொருட்கள் உட்கொள்வதை தடுப்பதற்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதனை அடுத்து தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

எனினும் இலங்கை அணியின் வீரர்களின் உடற்பயிற்சி பிரதானி மற்றும் உணவு பிரதானி ஆகியோர் குறித்த இந்த தீர்மானத்தை மேற்கொண்டு, அதனை உணவு வழங்கும் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளதாக இலங்கை அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த தீர்மானம் தொடர்பில் பல வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், இந்த தீர்மானத்துடன் வீரர்கள் மற்றும் முகாமையாளருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், இவ்வாறான பிரச்சினை ஏற்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

வீரர்களின் உணவு தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்கு முகாமையாளருக்கு அதிகாரம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீர்மானத்தை உடற்பயிற்சி பிரதானி மற்றும் வீரர்களின் உணவு பிரதானி ஆகியோரே எடுத்ததாக இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க தெரிவித்துள்ளார்.

 

 

(rizmira)