வெகுவிரைவில் டெல்லியை தாக்க தீவிரவாத சதி – உளவுத்துறை எச்சரிக்கை..

தீவிரவாதிகளின் ஊடுருவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த வாரம், இந்தியா அதன் அழிவுகாலத்துக்குள் சென்றுவிட்டது, விரைவில் இந்தியா சாம்பலாகும் என லஷ்கர் ஏ தொய்பா தீவிரவாத அமைப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தது.

இதை தொடர்ந்து தற்பொழுது, டெல்லியில் ஏழு தீவிரவாதிகள் வரை ஊடுருவி இருக்கிறார்கள், இவர்கள் ரம்ஜான் நிறைவுக்கு முன் எந்நேரத்திலும் பொதுமக்கள் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்தக் கூடும் என்றும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இதையடுத்து, காவல்துறையினர் விழிப்புடன் கண்காணிப்புப் பணியில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேரூந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், ஐந்து நட்சத்திர விடுதிகள், வணிக வளாகங்கள், சந்தைகள், வழிபாட்டுத் தலங்கள் வெளிநாட்டுத் தூதரகங்கள், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வரும் சுற்றுலாத் தலங்கள் ஆகிய இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இதுகுறித்து டெல்லி காவல்துறை பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளது. அதன்படி, பொது இடங்களில் கேட்பாரற்றுக் கிடக்கும் பொருட்கள், நிறுத்தப்படும் வாகனங்கள் ஆகியவை குறித்து எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்றவாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

(rizmira)